விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கயிறு இறுகி உயிரிழப்பு!!

கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பகுதியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி உயிரிழந்த சம்பவம் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

வழமையாக குறித்த பகுதியில் விளையாடுவதாகவும், அவ்வாறே இன்றும் விளையாடிக்கொண்டிருந்த போது அங்குள்ள மரம் ஒன்றில் விளையாட்டுவதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது சிறுவனை தாயார் மற்றும் சகோதரிகள் மீட்டு அயலவர்களின் உதவியுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts