விரைவில் 24ம் புலிகேசி படப்பிடிப்பு ஆரம்பம்!

வடிவேலு நடிப்பில், 24ம் புலிகேசி படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்க, சிம்பு தேவன் இயக்கிய, 23ம் புலிகேசி படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பின், அதே பாணியில், வடிவேலு நடித்த பல படங்கள், சொதப்பலாயின. அரசியல் பிரவேச தோல்வியால் சற்று ஒதுங்கியிருந்த வடிவேலு, தற்போது, கத்திச் சண்டை படம் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில், 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகமாக, 24ம் புலிகேசி படம் தயாரிக்க முடிவாகி உள்ளது.

விரைவில், படப்பிடிப்பு துவங்குகிறது. இதில், இரட்டை வேடத்தில், வடிவேலு நடிக்கிறார். படத்தை, லைக்கா மற்றும் ஷங்கர் இணைந்து தயாரிக்க உள்ளனராம்.

Related Posts