விரைவில் வெளிவரவிருக்கின்றது “விசரன்” முழுநீள திரைப்படம்

மனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் கஜதீபனின் இயக்கத்தில் வெளிவரவிருக்கின்றது “விசரன்” திரைப்படம்.

2014 NEW POSTER

இத் திரைப்படம் யாழில் நடந்த ஒர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்களிப்பில் உருவாயிருக்கும் இத்திரைப்படம் விரைவில் வெண்திரையில் திரையிடப்படும் என அவ் திரைப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

VISARAN NEWS

இயக்குனர் ம.கஜதீபன் ஏற்கனவே இரு குறுந்திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் யாழில் பல குறுந்திரைப்படங்கள் வெளிவந்தவண்ணமுள்ளன, ஆரோக்கியமான இந்த முயற்சிகளின் மத்தியில் ஈழத்து தமிழ் சினிமாவினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் சினிமாக்களில் ஓர் சினிமாவாக இந்த “விசரன்” திரைப்படம் அமையும் என இத்திரைப்படக்குழுவினர் நம்பிகை்கை தெரிவித்துள்ளனர்.

2014 poster 02

இத்திரைப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார் இ.அபிராமன். இத்திரைப்படத்தில் மிதுனா,ஸ்கெனோ பர்ணாண்டோ, இவர்களுடன் செந்தீசன், மாணிக்கம் ஜெகன், தனஞ்சயன்,டிலக்சன் என பலர் நடித்துள்ளார்கள்.

Related Posts