விரைவில் தீர்வை தாருங்கள்; கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை

கேப்பாபுலவு சொந்த நிலத்தை பெற்றுக்கொள்வற்காக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதின்மூன்றாவது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு புலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த போராட்டம் கடந்த முதலாம் திகதி முடிவுக்கு வந்தநிலையில் கேப்பாபுலவு பூர்வீக நிலத்தை கோரி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

2012 ஆம் ஆண்டு நலன்புரி நிலையங்களிலிருந்து மீள்குடியேற்றம் என தெரிவித்து அழைத்து வரப்பட்ட மக்கள் மாதிரிக்கிராமங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.

எனினும் கடந்த எட்டு வருடங்களாக அகதிகளாகவே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் தாம் அவ்வாறு வாழ்வதற்கு தயாரில்லை என தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts