விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்கள்! முதற்கட்டமாக வடக்கு கிழக்கில்!!

உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை பகுதிபகுதியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது.

அதன்படி எல்லை நிர்ணயப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில் எல்லை நிர்ணயம் முடிவுற்றிருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை விரைவில் நடத்த முன்னேற்பாடுகளைச் செய்ய ஆயத்தங்கள் நடந்துவருவதாக அறிய முடிகின்றது.

கூட்டு எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு குறைந்த மாவட்டங்களிலும் அரசுக்கு ஆதரவு – செல்வாக்கு – மிகுந்த பிரதேசங்களிலும் பகுதிபகுதியாக உள்ளூராட்சித் தேர்தல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

எல்லை நிர்யணப் பணிகள் பூர்த்தியானவுடன் உள்ளூராட்சித் தேர்தல்களை நாடு முழுவதும் ஒரேசமயத்தில் – அடுத்த வருடத்தில் – நடத்தலாம் என்று அரசாங்கம் அறிவித்து வந்த நிலையில் – அதற்குப் பதிலாக எல்லை நிர்யணம் முடிவுற்ற மாவட்டங்களில் பகுதிபகுதியாக தேர்தல் நடத்தலாம் என்ற கூட்டு எதிர்க்கட்சியின் யோசனையை அரசு தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரியவந்தது.

Related Posts