மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர்கள் எந்த வாக்களிப்பு நிலையங்களிலும் சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் வாக்காளர்கள், தகுந்த வாக்களிப்பு நிலையம் ஒன்றில் தமது வாக்குகளை அளிக்க முடியும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
எனினும் தேர்தல்களில் வாக்காளர் ஒருவர் அவர் வசிக்கின்ற பிரதேசத்துக்குறிய வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்களிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இருப்பினும் அதற்கு தகுந்த காரணங்களைக்காட்டி, அவர் மாற்று வாக்கு நிலையம் ஒன்றில் வாக்களிப்பதற்கு அனுமதி பெற முடியும். அதற்கமைய எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பினை மேற்கொள்ளலாம்.
1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின், 1993ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஏழாம் இலக்க சட்டத்தின் 125 ஏ சரத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.