விருதுகளை அள்ளிய அஞ்சலோ மெத்தியூஸ்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் வருடாந்த விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது உள்ளிட்ட நான்கு விருதுகளை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனதாக்கிக்கொண்டார்.

anjaloow-mathus

ஆண்டின் சிறந்த ஜனரஞ்சக வீரருக்கான விருதினை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த சகல துறை வீராங்கனையாக முன்னாள் அணித் தலைவர் சமரி அதபத்து தெரிவு செய்யப்பட்டார்.

ஆண்டின் வளர்ந்து வரும் சிறந்த வீரர் மற்றும் 20 இற்கு 20 போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதினை குசல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டார் .

20 இற்கு 20 போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளாரக நுவன் குலசேகர விருது வென்றார்.

ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் , ஒரு நாள் போட்டிகளின் சிறந்த வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த கசலதுறை வீரர் ஆகிய விருதுகளை இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனதாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts