உடல் எடையை குறைக்க விராட் கோலி எடுத்த முடிவு மிகச்சரியானது என டேவ் வாட்மோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, 350 ரன்கள் குவித்த போதும் இளம் கோலியுடன், கேதர் ஜாதவ் கைகோர்த்து இங்கிலாந்து பவுலர்களை சுளுக்கெடுக்க, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது எடையை குறைக்க எடுத்த முடிவு மிகச்சரியானது என தேவ் வாட்மோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாட்மோர் கூறியது:
விராட் கோலி தலைமை பொறுப்பு ஏற்றுக்கொண்ட முதல் போட்டியிலேயே தனது தலைமை திறமையை நிரூபித்துள்ளார். அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என எடுத்த முடிவே அவரின் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த முடிவு. அப்போது தான் ஒருவர் மனவலிமையுடன் செயல்பட முடியும். அது வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும். இவ்வாறு வாட்மோர் கூறினார்.