விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள்

இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள்.

கடந்த வாரமே இருவரும் இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது.இந்த நிலையில் நேற்று திருமணம் முடிந்தது.

இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்றார்கள்.

கடந்த 2013ம் ஆண்டு ‛ஷாம்பு விளம்பரம் ஒன்றில் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. விராட் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை காண அனுஷ்கா ஷர்மா விளையாட்டு மைதானங்களுக்கு சென்றார். கொஞ்சம் காலம் இருவரும் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பிறகு இருவரும் பிரியவில்லை என்றும் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள் எனவும் இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts