வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல் கலப்பற்ற விதத்தில் இளைஞர்களின் ஆதரவு போராட்டத்துக்கான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நாளை (26.01.2017) வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் நடைபெறும்.

மேலும் வெள்ளிக்கிழமை 27.01.2017 அன்று காலை 9 மணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் வவுனியா விஜயம் செய்யப்பட்டு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

உணர்வுள்ள அனைவரும் தயவுசெய்து எம் மக்களிற்கு கைகோர்க்க 26.01.2017 வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts