வியாபார நிலையமாக மாறிய நினைவுத்தூபி

சித்திரைப் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்.குடா எங்கும் வியாபாரம் களைகட்டியிருந்தது.தென் இலங்கையில் இருந்து வந்த வியாபாரிகளால் யாழ் குடா எங்கும் வீதிகளில் கடைகள் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களைத் திறந்துவைத்து வரி கட்டி வியாபரம் செய்யும் நிலையில், தென் இலங்கையில் இருந்து வந்த வியாபாரிகளால் வீதிகளில் நடை பாதைகளில் கடைகளை விரித்து மலிவான விலையில் விற்பதால் வர்த்தகர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அத்துடன், எங்கெங்கெல்லாம் கடைகளை போட முடியுமோ அங்கெல்லாம் எந்தவித அனுமதியுமின்றி கடைகளைப் போட்டு தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள, முஸ்லீம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அவ்வகையில் தமிழராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலும் அதன் மதிற் சுவரிலும் ஆடைகளைப் போட்டு வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

tamil-arachchey-manadu

Related Posts