விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய கிளர்ச்சியாளர்கள்

கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Moment Rebel Finds Gold Ring while Rifling Through MH17 Wreckage

அந்த வீடியோ காட்சியில் இராணுவ சீருடையணிந்த 3 கிளர்ச்சியாளர்கள் விமான சிதைவுகளிடையே பொருட்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளமை காண்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களில் கறுப்பு தொப்பி அணிந்துள்ள கிளர்ச்சியாளர் தங்க மோதிரம் போன்ற பொருளை சிதைவுகளிலிருந்து எடுக்கிறார்.

அந்த மோதிரம் மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணியொருவரின் பயணப் பொதியிலிருந்தோ அல்லது அவரது சடலத்திலிருந்தோ எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ரஷ்யர் ஒருவரால் முதன்முதலாக டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் குறிப்பிட்ட நேரத்துக்குள் உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கானோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts