விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!! ஐந்து பேர் பலி!

அமெரிக்காவின் போர்ட் லாடர்டேல் விமான நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடர்டேல் விமான நிலையத்திற்கு நேற்று வந்த சாண்டியாகோ என்ற இளைஞர்,தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென கண்மூடித் தனமாக சுட்டுள்ளார்.இதில் அங்கு இருந்த அப்பாவி பொதுமக்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அவருடைய கைப்பையில் இருந்து துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சாண்டியாகோ என்ற அந்த நபர்,அமெரிக்கா ராணுவத்தில் பணியாற்றியவர் என தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஏதோ ஒரு குரல், தன் தலையிலிருந்து பேசுவதாகவும்,அந்த குரல் தன்னை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேரச் சொல்லுவதாகவும் சாண்டியாகோ தெரிவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts