விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்ட விமான விபத்து

ஸ்பெய்னின் பாசிலோனா விமான நிலையத்தில், இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெறவிருந்த பாரிய விமான விபத்தொன்று விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்டுள்ளது.

Barcelona-airport-plane

போயிங் 767 ரக விமானம் ஒன்றும், A 340 என்ற விமானமும் ஒரே ஓடு தளத்தில் மோதி விபத்து சம்பவிக்க இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவிலிருந்து வந்த விமானம் பாசிலோனா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட அதே ஓடு தளத்தில் மற்றுமொரு விமானம் பறப்பதற்குத் தயாரானது.

இந்நிலையில் மற்றுமொரு விமானம் நகர்வதை அவதானித்த குறித்த ஓடுதளத்தில் தரையிறங்க இருந்த ரஷ்ய விமானத்தின் விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்தை வேறு திசைக்குத் திருப்பி குறித்த விமானம் பயணித்த பின்னர் தனது விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

Related Posts