விமல் வீரவன்ச நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் கைது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

இதற்கு முன்னரும் விமலிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையில், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts