இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இன்று காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று காலை செல்லுபடியற்ற கடவுச்சீட்டில் இத்தாலிக்கு புறப்பட்டு செல்வதற்காக முற்பட்ட வேளை விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.