விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை!

வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் “எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம்“ எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் இருவர் சிவப்புக் கொடியுடன் நின்று அவ்வீதியால் பயணிக்கும் வாகன சாரதிகளிடம் மெதுவாகப் பயணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts