விபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் படுகாயம்

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியில் திங்கட்கிழமை (12) மதியம் இடம்பெற்ற விபத்தின் போது, வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கரடிப்போக்குச் சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, வீதிக்கு வரும்போது, கன்ரர் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த அவர் முதலில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts