விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளியாவெளியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

Related Posts