விபத்தில் இருவர் மரணம்

கிளிநொச்சி, புதுக்காட்டுச் சந்தியில் இன்று புதன்கிழமை (18) அதிகாலை பாரவூர்தியொன்று மரத்துடன் மோதியதால், பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

பாரவூர்தியின் உரிமையாளரும் சாரதியுமான இரத்தினசிங்கம் தர்மசிங்கம் (வயது 51), ஆவரங்காலைச் சேர்ந்த தெய்வம் ரங்கநாதன் (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு தம்புள்ளைக்கு சென்றுகொண்டிருந்த பாரவூர்தியின் முன் சில்லு ரயர் வெடித்ததாலேயே, பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியது.

இருவரது சடலங்களும் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts