விநாயகர் சதுர்த்திக்கு வந்த வினை!

இன்று புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியாகும். இத்தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் சதுர்த்தி விசேட பூசைகள் மாதாமாதம் நடைபெறுவது வழக்கம்.

pillayar

இன்று சதுர்த்தி பூசைகள் வழக்கம் போல பிள்ளையார் ஆலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு சென்ற இராணுவத்தினர் பூசை வழிபாடுகளை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் விநாயக பக்தர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். குறிப்பாக இன்று நடைபெறவிருந்த அன்னதான நிகழ்வுகளை இராணுவத்தினர் தடை செய்ததால் சமைத்த உணவுகள் ஆலயங்களில் தேங்கிக் கிடைக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி, பளை, கச்சாய் போன்ற இடங்களில் விநாயகர் ஆலயங்களில் இவ்வாறு இந்தக் கதி ஏற்பட்டுள்ளது.

Related Posts