விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கைது

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று வாக்குமூலம் அளிக்கச் சென்ற இவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அம்மான், பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

பின்நாட்களில் அக் கட்சியில் இருந்து விலகிய அவர், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு பிரதியமைச்சர் பதவி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவி போன்ற முக்கிய பொறுப்புக்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts