வித்யா படுகொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்க கோரி யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் பின்னர் குறித்த 09 நபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts