வித்யா கொலை வழக்கு: DIG-இன் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கில் யாழ். பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன், நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts