வித்தியா வழக்கு இன்று முதல் தொடர் விசாரணை: அரசியல்வாதி ஒருவருக்கும் சிக்கல்?

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வருகின்ற வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் இன்று(செவ்வாய்கிழமை) தொடக்கம் மீண்டும் தொடா்ச்சியாக நடைபெறவுள்ளது.

யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு, தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்ற தீா்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று ஆரம்பிக்கப்படும் வழக்கு விசாரணையானது 19, 20, 24 மற்றும் 26 ஆகிய தினங்களில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

குறித்த வழக்கானது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய மூன்று தமிழ் மொழி பேசும் நீதிபதிகள் முன்னிலையில் கடந்த மே மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நிறைவடையலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, இரண்டாம் கட்ட விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த கொலை வழக்குடன் தொடர்புடைய அரசியல்வாதியொருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts