வித்தியா வழக்கில் தலைமறைவான ஸ்ரீகஜன் விரைவில் கைது: பொலிஸ்மா அதிபர்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் தலைமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்டுள்ளதுடன், அவருடன் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் தொடா்புபட்டுள்ளார்.

தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருவதுடன், பொலிஸ் சேவையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது” என என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

Related Posts