புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அவரது விளக்கமறியல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
3 லட்சம் பெறுமதியான காசுப் பிணையிலும், 5 லட்சம் ரூபா பெறுமதியான 4 ஆள்பிணையிலும் அவர் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கடவுச் சீட்டை முடக்கவும், வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் நீதிமன்று உத்தரவிட்டது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கையொப்பம் இட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.