யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. இதில் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிரான சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்ட வில்லை.
குறித்த வழக்கு விசாரணைகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய “ட்ரயலட் பார்” முறையில் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று தொகுப்புரைகள் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் தொடுனர் தரப்பினால் தொகுப்புரைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை எனவும் ஏனைய எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளிகளுக்கு எதிராக தொகுப்புரைகளை முன்னிறுத்தி 41 குற்றச்சாட்டுக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டன.