வித்தியா படுகொலை வழக்கு: ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணை

கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. இந்த விசாரணைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயத்தில் இன்றைய தினமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற விசாரணைகளின் போது, மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துஷாந்தனின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக சாட்சியமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts