வித்தியா படுகொலை வழக்கு; 09 சந்தேகநபர்களுக்கு 03 மாத விளக்கமறியல்

புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியா பாலியல் வன்புனர்வின் பின் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரனை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் பரீசிலனையில் உள்ள நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

அதேவேளை முதலில் கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களதும் விளக்கமறியல் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கும், மீண்டும் ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் 08.02.2017 அன்று யாழ்.மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



குறித்த மாணவி பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

முதலில் ஒன்பது சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related Posts