வித்தியா படுகொலை: மேலும் இருவர் கைது!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts