புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளது.மிக விரைவில் சாட்சியின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்ற்ப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் தோன்றிய குற்றபுலனாய்வு பிரிவினர் குறித்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.
இன்னமும் மரபணு பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. மேலும் வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர் உள்ளார். அவருடைய சாட்சியமும் மன்றில் பதிவு செய்யப்படும் என்றார்.