வித்தியா படுகொலை: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும் தற்போதைய மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான லலித் ஏ.ஜெயசிங்க, கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினரால் நேற்று அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட லலித் ஏ.ஜெயசிங்கவை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ. சபேசனின் வாசஸ்தலத்தில், நேற்று காலை 6.30 மணியளவில் முற்படுத்தியபோதே. பதில் நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதேவேளை கைதுசெய்யப்பட்ட லலித் ஏ.ஜெயசிங்கவை, மூன்று நாட்களுக்கு, தமது கட்டுப்பாட்டில் தடுதது வைத்து விசாரணை செய்வதற்கு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர், பதில் நீதிவானிடம் அனுமதி கோரினார்கள். அதற்கு பதில் நீதவான் அனுமதியளித்தார்.

Related Posts