வித்தியா கொலை விவகாரம்: மரபணு அறிக்கை தாக்கல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மரபணு அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் யாவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றினால் பாரப்படுத்தப்பட்டது.

நேற்றைய தின சாட்சியப் பதிவுகள் இரவு 7 மணிவரை ஒத்திவைக்கப்பட்ட அதேவேளை, இன்றைய தினம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தின் மூன்றாவது கட்டடத் தொகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் கடந்த 28ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

வழக்கின் ஒன்பது சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வருவதோடு, சாட்சிகளில் பலர் அவர்களை அடையாளம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts