வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலமொன்றை பதிவுசெய்யுமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில் அண்மையில் தெரிவித்திருந்த தகவல்களின் பிரகாரம், இவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவி வித்தியா படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபரை மக்கள் பிடித்து கட்டிவைத்திருந்த நிலையில், அங்கு சென்ற விஜயகலா அவர்களை விடுவிக்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படும் ஒலிநாடா ஒன்றும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஒலிநாடாவில் உள்ள குரல் ராஜாங்க அமைச்சர் விஜயகலாவினுடையது தானா என்பதை உறுதிப்படுத்துமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ட்ரயல் அட் பார் நீதிபதிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts