புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற வித்தியாவின் கூட்டு வன்புனர்வு நாட்டை பெரும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட ஆவணங்களை சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளனர்.
யாழ். மேல் நீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதியே பணியாற்றுகின்ற நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் வழக்கொன்று மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வினால் நடாத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.