வித்தியா கொலை வழக்கில் 13 ஆவது நபரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தனிமையில் நீதிவான் வை.எம்.எம்.றியால் முன்பாக நேற்று முற்படுத்தினர்.
புங்குடுதீவில் மாணவி வித்தியா கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து ஒரு வருடம் கழிகின்ற நிலையில் 13 ஆவது நபர் ஒருவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
புங்குடுதீவை சேர்ந்த இந்த நபர் குறித்து பொலிஸார் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் பொலிஸார் குறித்த நபரை நீதிவானிடம் தனியாக முற்படுத்தியிருந்தனர். குறித்த நபர் சந்தேகநபரா அல்லது சாட்சியாளரா என்பது குறித்தும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.