புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஜெயவர்த்தன ராஜ்குமார் என்ற 10ஆவது சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
மாணவியின் கொலை வழக்கு, விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 10ஆவது சந்தேகநபரும் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார், மரணச் சடங்கில் கலந்துகொண்டார் மற்றும் 9ஆவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவரின் அலைபேசி இலக்கம் மற்றும் புகைப்படம் என்பவற்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.