Ad Widget

வித்தியா கொலை வழக்கு: விரைவில் தமிழ்மாறனும் காவல்துறை அதிகாரியும் கைதாகலாம்!

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என்பவரைத் தப்பவைக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் இருவரும் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது.

tamil-maran-police

வித்தியாவின் கொலைச் சம்பவம் நடைபெற்றபோது யாழ். மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகராக லலித் ஜெயசிங்க கடமையிலிருந்தார். இவர் சட்டவிரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறனின் மாணவர் எனத் தெரியவருகின்றது.

சந்தேகத்தின்பேரில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட சுவிஸ்குமாரை தான் காவல்துறையினரிடம் ஒப்படைப்பதாக அழைத்துச் சென்ற வி.ரி.தமிழ்மாறன், தனது மாணவனான காவல்துறை அத்தியட்சகருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல அனுமதியளித்ததாகத் தெரியவருகின்றது.

வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்வதற்கு வெள்ளவத்தையில் தங்கியிருந்தவேளையில் சுவிஸ்குமார் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையையடுத்து இவர்கள் இருவரும் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது.

Related Posts