வித்தியா கொலை வழக்கு: புங்குடுதீவில் இருந்து வெளியேறியோர் குறித்தும் விசாரணை!

ட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் மரணத்தின் பின்னர் புங்குதீவில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கு நேற்று நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ் வழக்கு தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவை எனக் கோரினர்.

இதற்குப் பதிலளித்த நீதிவான் குறித்த படுகொலை சந்தேக நபர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருக்கும் காலம் ஒரு வருடத்தை எட்டுகிறது. அவர்களை ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் தடுத்து வைத்திருக்க முடியாது. இதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது மேல் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பொலிஸாருக்குத் தெரிவித்தார்.

குறித்த படுகொலை சந்தேக நபர்களில் 5ஆவது மற்றும் 6ஆவது சந்தேக நபர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான வழக்கறிஞர் இருவரையும் இவ் வழக்கு தொடர்பாக தாம் சந்திக்க வேண்டும் அதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரினர். அதனை நீதிவான் நிராகரித்திருந்தார்.

அத்துடன் வித்தியாவின் படுகொலை இடம்பெற்றதன் பின்னர் அப் பகுதியிலிருந்து வெளியேறி சென்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை நேற்றைய தினமும் மரபணு அறிக்கை மற்றும் கொலை நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் தொடர்பாக பகுப்பாய்வுக்கு அனுப்பட்ட எந்தவித அறிக்கைகளும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் இவ் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

Related Posts