வித்தியா கொலை வழக்கு : இன்றும் தீர்வில்லை

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மாணவி வித்தியா கொலைசெய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், கொலையாளிகள் குறித்து இன்னும் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை அண்மையில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts