வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கேடுகளை இரும்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பதிவாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, மேற்படி வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்த நிலையில், குறித்த வழக்கை யாழ்ப்பாணத்தில் நடத்த வலியுறுத்தி புங்குடுதீவு மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts