Ad Widget

வித்தியா கொலை : மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் வழக்கு ஒத்திவைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டு வன்புணர்வின் பின்னரான படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு தனியார் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அந்த மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கினை எதிர்வரும் 09 ஆம் திகதி நவம்பர் மாதத்திற்கு யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கிற்கு மாணவி வித்தியாவின் தாயார் மற்றும் சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related Posts