புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேக நபர்கள் மேல் நீதிமன்றில் ஆஜர்!

வித்தியா கொலை சந்தேக நபர்கள் மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செளியன் முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

viththeya-poonguduthevu-

யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் இன்று 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் புதனன்று தாக்கல் செய்திருந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Related Posts