புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சுவிஸ்குமார் உட்பட ஆறு பேரினை கொலைக்குற்றவாளிகள் என குறித்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் புலனாய்வு துறை அறிவித்துள்ளது. இன்று காலை மேற்படி வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ரியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே புலனாய்வு துறை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
குறித்த கொலைக்கு சுவிஸ்குமார் திட்டமிட்டார் எனவும், இரண்டாம் மூன்றாம் சந்தேக நபர்களான தவக்குமார்,ஜெயக்குமார் ஆகியோர் வித்தியா பாடசாலை செல்லும் போது வழிமறித்தனர் எனவு, ஆறாம் சந்தேக நபரான பிரதேச சபையில் பணியாற்றிய துசாந்தன் என்பவரும் ஐந்தாம் சந்தேகநபரும் வித்தியாவை வன்புணர்வு செய்தனர் எனவும்.
பதினோராம் சந்தேக நபர், இவர்கள் வன்புணர்வு செய்யும் போது யாரும் வருகிறார்களா என பார்த்து கொண்டு காவலுக்கு இருந்ததாகவும் புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கான தண்டனைகள் வெகுவிரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வித்தியாவின் வழக்கில் இன்று புதிய திருப்பு முனையாக இந்த வழக்கு பாரக்கப்படுகின்றது.