வித்தியாவின் கொலை வழக்கு! : ஜனாதிபதியின் கருத்து

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனையானது வரலாற்று ரீதியில் மதிக்கப்பட வேண்டிய ஓர் தீர்ப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு 30 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் தண்டப் பணமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பானது முக்கியமானதோர் தீர்ப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்ப்பிற்கு பலதரப்பிலிருந்தும் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருவதோடு நல்ல வரவேற்புகளும் கிடைத்தவாறு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பாடசாலையில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. எனினும் அதே பாதுகாப்பு வீடுகளிலும் கிடைக்கின்றதா என்பதே இப்போது கேள்விக் குறியாகியுள்ள விடயம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts