வித்தியாவின் கொலை சம்பவ சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றயதினம் 12 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்பட்டனர். இவர்களுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 28ம்திகதி வரை நீடிப்பதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எல்.எம். றியால் உத்தரவிட்டார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் மேற்கொண்டுள்ள 14 வங்கிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவு நேற்று நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கமைவாக நீதவான் இதற்கான அனுமதியை வழங்கினார்.

இந்த மாணவி கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts