வித்தியாவின் கொலைச் சந்தேக நபர்கள் ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கிருக்கும் ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது ஆதிகத்தினைச் செலுத்தி ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைச்சாலைக்குச் செல்லும் சந்தேக நபர்களை தாங்கள் சொல்வதைச் செய்யவேண்டுமெனப் பணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாதவர்களை மிரட்டுவதுடன், அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதோடு, அவர்கள்மீது தாக்குதல் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறைச்சாலைக் காவலர்களுக்கு தெரியப்படுத்த முயல்பவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதால் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் மௌனம் காப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts