வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் பார்த்திபன்

பார்த்திபன், தற்போது அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்‘ திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான கெட்–அப்பில் நடித்து வருகிறார். ‘டூ மூவி பப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தயாரிபில் உருவாகி வரும் இதில், கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

parthiban

இது குறித்து தயாரிப்பாளர் பி.எஸ்.ரகுநாதன் கூறும்போது… “எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை அப்படியே உள்வாங்கி திரையில் பிரதிபலிக்கும் திறமை பார்த்திபன் சாருக்கு உண்டு. இந்த கதாப்பாத்திரம் பற்றி இயக்குனர் சுதர் என்னிடம் விவரிக்கும் போதே, பார்த்திபன் சார் தான் இதற்கு சரியான ஆள் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அவருக்கும் இந்த பாத்திரம் மிகவும் பிடித்து விட்டது.

இந்த கதாப்பாத்திரத்துக்கான கெட்டப்பை உருவாக்கியதே பார்த்திபன் சார் தான். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் என்ற வரிசையில்,பல யோசனைகளையும், கருத்துகளையும் அவர் எங்களுக்கு வழங்கியது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது நடிப்பில் ஒரு வித்தியாசமான வேடத்தை ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் காண்பார்கள் என்றார்.

Related Posts