வித்தியாசமான கெட்டப் கேட்கும் விக்ரம்!

தமிழ்சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கெட்டப்புகளில் அதிகமாக நடித்திருப்பவர் விக்ரம். அந்த வகையில், சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ, தெய்வத்திருமகள் என பல படங்களில் அவர் உடலை வருத்தி மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்தார்.

vikram

அதோடு, ஒவ்வொரு கேரக்டர்களுக்காகவும் அதிகமாக மெனக்கெடவும் அவர் தயாராக இருந்து வருகிறார். குறிப்பாக, ஐ படத்திற்காக அடையாளமே தெரியாத அளவுக்கு அவர் தனது உடலை மெலிய வைத்து நடித்தது பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அப்படிப்பட்ட விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார். இந்த கெட்டப்பும் இதுவரை வெளியான திருநங்கை வேடங்களில் இருந்து மாறுபட்ட தாக இருக்க வேண்டும் என்று தனது பாணியில் நிறையவே உடல்உழைப்பை கொடுத்திருக்கிறார் விக்ரம்.

இந்த நிலையில், அடுத்தபடியாக கருடாவில் நடிக்க தயாராகி விட்ட அவர், அதற்கடுத்து நடிப்பதற்காகவும் அவ்வப்போது புதிய கதைகள் கேட்டு வருகிறார்.

அந்த வகையில், தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், நார்மலான கதையாக இல்லாமல், ஏதாவது புதுமையானதாக முக்கியமாக, வித்தியாசமான கெட்டப் பில் நடிக்கும்படியான கதைகளாக சொல்லுங்கள் என்கிறாராம். அதனால் விக்ரமை இன்னும் எந்தமாதிரியான வித்தியாசமான கோணங்களில் வெளிப் படுத்தலாம் என்று சில டைரக்டர்கள் தீவிரமாக டிஸ்கஷன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts